2024 வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு நகர்ப்புற திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3000 ரூபா வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பெறப்படும் வாடகையை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தி, அந்தந்த வீடுகளின் முழு உரிமையையும் அந்த வீடுகளுக்கு வழங்க இவ் வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-ம் ஆண்டில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உரித்தாகும்.