சென்னை: நடிகை சமந்தா தற்போது சிகிச்சை காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் காணப்படுகிறார் சமந்தா. ஆனாலும் சமூக வலைதளங்களில் அவரை அதிகமாக ஆக்டிவாக பார்க்க முடிகிறது. தற்போது பூடானில் தன்னுடைய தோழியுடன் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ள சமந்தா அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
