
வெளியானது அனிமல் படத்தின் மூன்றாவது பாடல்
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து வரும் திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு பிரிதிவிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், இரண்டு பாடல்கள் வெளியானது. தொடர்ந்து தற்போது இப் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ஹிந்தி (பாபா மெரி ஜான்) தமிழ் (நீ என் உலகம்) என்கிற அப்பா, மகன் பாசத்தை மையபடுத்திய பாடல் வெளியாகியுள்ளது.