“ஐடி துறையில் டிமாண்ட் இருக்கு" – ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி சொன்ன டெக் மஹிந்திரா சீனியர்!

டெக் மஹிந்திராவின் புதிய தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக செவ்வாய் கிழமையன்று பீயுஷ் துபே இணைந்தார்.

மோஹித் ஜோஷி டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் அங்கிருந்து வெளியேறிய பின் டெக் மஹிந்திராவின் எம்டி மற்றும் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். 

பீயுஷ் துபே

பீயுஷ் துபே இன்ஃபோசிஸ்-ல் இருந்தவர். தற்போது இவர் டெக் மஹிந்திராவின் மார்க்கெட்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பீயுஷ் துபேயும் மோஹித் ஜோஷியும் ஒன்றாக வேலை பார்த்த சக ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்றுக்கு பின்னரான பணிநீக்கத்தால் பெருமளவு பாதிப்பு ஐடி துறையில் நிகழ்ந்தது. பொருளாதார பிரச்னைகள் காரணமாக ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அதோடு ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

அக்டோபர் 26 அன்று, டெக் மஹிந்திராவின் Q2FY24 வருவாய் மாநாட்டின் போது, ஜோஷி நிறுவனத்தின் உள் மறுசீரமைப்பை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

ஜோஷி கூறுகையில், “இந்த மறுசீரமைப்பு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். பல மூத்த நிர்வாகிகள் இப்போது புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

மோஹித் ஜோஷி

நிறுவனத்தின் தற்போதைய தலைமை மனித வள அதிகாரி (CHRO) மற்றும் சந்தைப்படுத்தல் தலைவரான ஹர்ஷ்வேந்திர சோயின்,  ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் வணிகத்தை வழிநடத்த ஆஸ்திரேலியாவிற்கு மாறுகிறார். எனவே நிறுவனம் புதிய தலைமை மனித வள அதிகாரியை தேடும் பணியில் உள்ளது.     

அதோடு சமீப காலங்களில் இந்திய ஐடி துறையில் பல சீனியர் அதிகாரிகள் தங்களது வேலையை ராஜினாமா செய்து, வேறு நிறுவனத்திற்கு சென்றுள்ளார்கள். எனவே ஐடி துறையில் பணி வாய்ப்புகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் சீஃப் எக்ஸ்பீரியன்ஸ் ஆபிஸருக்கு தேவை இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். 

ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் இருப்பது குறித்து மோஹித் ஜோஷி அறிவித்துள்ளது, ஐடி ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.