திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று அவர்களின் […]
