
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா
விஜய்யுடன் நடித்த லியோ படத்திற்கு பிறகு அஜித்துடன் விடாமுயற்சி, மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் த்ரிஷா. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 22வது படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராக உள்ளது. ஏற்கனவே 2005ம் ஆண்டில் திரிவிக்ரம் இயக்கிய அதாடு என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.