புதுடெல்லி,
கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும். இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும். 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது.
Related Tags :