தங்கவயல் : உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழிப்புணர்வு பேரணி தங்கவயலில் நேற்று நடந்தது.
இந்திய மருத்துவ சங்கம் தங்கவயல் கிளை, தங்கவயல் தாலுகா சுகாதார நிலையம், சட்ட சேவை மையம், வக்கீல்கள் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தின.
தங்கவயல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுநாத், இந்திய மருத்துவ சங்கத்தின் தங்கவயல் தலைவர் விஜயகுமார், பொதுச் செயலர் சிவகுமார், வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட குடும்ப நல அதிகாரி சந்தன், தாலுகா சுகாதார அதிகாரி பத்மாவதி, நுாரி நர்சிங் கல்லூரி நிறுவனர் ஷாஜதா ஆகியோர் நகராட்சி திடலில் பேரணியை துவக்கினர்.
தங்கவயலின் செவிலியர் கல்லுாரிகளின் மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நகராட்சி திடலில் இருந்து புறப்பட்டு ராபர்ட்சன்பேட்டை பி.எம்.சாலை, சுராஜ்மல் சதுக்கம், காந்தி சிலை, பிரிட்சர்ட் சாலை, கீதா சாலை வழியாக சென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement