
விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு?
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று அவரது குடும்பத்தாரிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி சங்கத் தலைவர் ஆர்கே செல்வமணி ஆகியோர் விசாரித்துள்ளார்கள்.
தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ள விஜயகாந்தின் உடல்நிலை சீராக வேண்டுமென அவரது ரசிகர்களும், கட்சியினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு
விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.