நன்னடத்தை அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கான வேலைத் திட்டம் ஆரம்பம் – பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

நன்னடத்தை உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் ஆரம்பிப்பதாக பெண்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கீதா குமாரசிங்க நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கல்முனையில் சிறுவன் ஒருவன் இறந்த நிகழ்வு தொடர்பாகக் கருத்துரைத்த அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

தான் இச்சம்பவம் குறித்து மிகவும் கவலையுடன் தேடிப் பார்த்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பிள்ளை பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவன் எனக் குறிப்பிட்டார்.

நன்னடத்தை என்பது பிள்ளைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என அனைத்தையும் கவனிக்க வேண்டிய இடத்தில் இவ்வாறான துரதிஷ்ட வசமான சம்பவம் தொடர்பாக நான் மிகவும் வருந்துகிறேன். இதற்கு நன்னடத்தை அதிகாரியும் ஒரு காரணமாக இருந்திருப்பது வருந்தத் தக்க விடயம். ஆனால் நன்னடத்தை அதிகாரி என்றால் சாதாரண பராமரிப்பாளர்கள் மாத்திரமல்ல. சேவையாளர்கள் அல்ல. அவர்களுக்கு பிள்ளைகளின் மனோ நிலையை புரிந்து கொள்ள இயலுமாக இருக்க வேண்டும்.

மிகவும் விரைவாக அமைச்சு மட்டத்தில் அந்த அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.