கடந்த வருடத்தை விட 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், கல்விக்காக 55 பில்லியன் ரூபா அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
இன்று (05) பாராளுமன்றத்தில், கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
பாடசாலை மாணவர்களுக்கு கல்வியின் அத்தியாவசியமான பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவுகள் மற்றும் காலணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். பாடசாலைகளுக்கான புதிய கல்வி ஆண்டு எதிர்வரும் 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதற்கு முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு வழங்குவதே தமது இலக்கு ஆகும்;. அதற்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெற்றுக்கொள்ள nதிர்பார்த்துள்ளோம்.
2022ஆம் ஆண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கு, கடதாசி; தட்டுப்பாடு; ஏற்பட்டது, ஆனால் அடுத்த ஆண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களில் 40 வீதம் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. தனியார் துறையால் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களும் இன்னும் இரண்டு வாரங்களில் அச்சிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதன்படி, பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன் அனைத்து பாடப் புத்தகங்களையும் விநியோகிக்க முடியும்.
அடுத்த ஆண்டுக்கான சீருடைகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலணி விநியோகம் தொடங்கியது. டிசம்பர் 27ஆம் திகதிக்குள் பாடசாலை காலணிகள் வழங்கப்படும். இவ்வாறு 47,000 காலணிகள் வழங்கப்படும்.
தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட்டுள்ளன. க.பொத சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக 13880 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும. யு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த உயரட தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த வாரம் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. விண்ணப்பித்த 84,000 மாணவர்களில், 40,000 பேர
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோட்டப் பாடசாலைகளுக்கு மேலதிக சீருடை விநியோகம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண மட்டத்தில் 14,935 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், அனைத்துப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அதற்கான நிதி ஒதுக்கீடு சீன அரசாங்கத்திடம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலைகளின் திருத்த வேலைகளுக்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுகப்பட்டுள்ளதாகவும், 74 பாடசாலைகள்; சிதைவடைந்த கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.