
அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் – சந்தோஷ் நாராயணன்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். சென்னை பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து 10 ஆண்டுகள் வெள்ளப்பெருக்கில் எங்கள் குளப்பாக்கம் பகுதி வீடுகள் மழை நீரால் சூழப்படுவதும், 100 மணிநேரம் மின்சார தடையும் எதிர்கொள்கிறோம்.
குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியோ அல்ல. பரந்த நிலமும், நீர்நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், பேராசை, மோசமான நிர்வாகமே மழை நீரையும், சாக்கடையையும் ஒரே கால்வாய்க்குள் கலக்க செய்து இப்பகுதியை நீரில் மூழ்கடிக்கிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடம் படகு உள்ளது. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.