தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வியாழன் அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தவிர, அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களின் இலாகா விவரம் நேற்று வெளியானது : பாட்டி விக்ரமார்கா (துணை முதல்வர், நிதித்துறை, மின்சாரம்), உத்தம் குமார் ரெட்டி (தண்ணீர் வடிகால், சிவில் சப்ளைஸ்), கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி (சாலை மற்றும் கட்டிடங்கள், திரைத்துறை), ஸ்ரீதர் பாபு (ஐடி, தொழில்கள், சட்டமன்ற விவகாரங்கள்), சீதக்கா (பஞ்சாயத்துராஜ், ஊரக வளர்ச்சி, பெண்கள், குழந்தைகள் நலன்), […]
