Jigarthanda DoubleX: ‘படத்த பாக்குறேன்…' – நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டிடம் இருந்து வந்ததா பதில்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் திரையரங்குகளில் வெளியான  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இது தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்திலும் வெளியாகி உலங்கெங்கிலும் இருக்கும் சினிமா ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரான கிளின்ட் ஈஸ்ட்வுட் குறித்த காட்சிகள், கட் அவுட்கள் இடம்பெற்றிருக்கும். அல்லியஸ் சீசராக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் படப்பிடிப்பில் அவரின் உயிரைக் காப்பாற்றி அதற்குப் பரிசாக கேமாரா ஒன்றை அவரிடமிருந்து பெற்றதாகவும் ஒரு ப்ளாஷ்பேக் இடம்பெற்றிருக்கும்.

அதுமட்டுமின்றி அன்று முதல் அல்லியஸ் சீசர், திரையரங்கில் வைத்து, க்ளின்ட் ஈஸ்ட்வுட் படத்தை அடிக்கடி பார்ப்பதாகவும், அவரது பாணியில் தனது எதிரிகளை அங்குதான் கொள்வது போன்ற காட்சிகளும் இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றிருக்கும். இந்தக் காட்சிகளெல்லாம் படத்திற்கு சுவாரஸ்யங்களைக் கூட்டியிருக்கும். இந்நிலையில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போஸ்டரைப் பகிர்ந்து ஹாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் பக்கத்தில் வெளியாகியுள்ள எக்ஸ் பதிவில் “இப்படத்தைப் பற்றி கிளின்ட் கேள்விப்பட்டார். அவர் தனது புதிய படத்தை (Juror 2) முடித்தவுடன் இப்படத்தைப் பார்ப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.