சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. வேட்டையன் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
