வாஜ்பாய் வாழ்க்கை படம்: ஜனவரி 19ம் தேதி வெளியாகிறது

இந்திய அரசியல் வரலாற்றில் தூய்மையான பிரதமர் என்று பெயரெடுத்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். பாரதிய ஜனதா கட்சிக்கு ஆணி வேராக இருந்தவர். அவரது வாழ்க்கை 'மெயின் அடல் ஹூம்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. வாஜ்பாயாக பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங், கமலேஷ் பனுஷாலி தயாரிக்கின்றனர்.

மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் பால்ய காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இந்தப் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தில் நடித்திருப்பது பற்றி பங்கஜ் திரிபாதி கூறும்போது “ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது கஷ்டமான விஷயம். வாஜ்பாய் மாதிரி பேசுகிறேனா, அவர் மேனரிசங்கள் என்னிடம் இருக்கிறதா என்றெல்லாம் உன்னிப்பாக கவனிப்பார்கள். அவரின் பர்சனாலிட்டியை வெளிப்படுத்தினால், நான் ஜெயித்ததாக அர்த்தம். ஒரு உன்னத மனிதராக நடிக்க கிடைத்த வாய்ப்பு நான் செய்த புண்ணியம். அவராக நடித்தன் மூலம் என் வாழ்க்கையிலும் நான் நல்லவனாக வாழ தொடர்ந்து முயற்சிப்பேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.