வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: காசி தமிழ்சங்கம் 2.0 விழாவில் பேசிய பிரதமர் மோடி இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு புதிய துவக்கமாகும். மேலும் இது உங்களை சென்றடைவதில் எளிதாக்குகிறது என்று நம்புகிறேன் என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: காசி தமிழ்சங்கம் 2.0 விழாவில் கலந்து கொண்டுள்ள நீங்கள் அனைவரும் விருந்தினராக இருப்பதை விட எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்துள்ளீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.தொடர்ந்து விழாவிற்காக விடப்பட்டு உள்ள சிறப்பு ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பிரதமரின் உரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் பேசியபோது, உலகின் பிறநாடுகள் அரசியலை இலக்கணமாக கொண்டுள்ளது. ஆனால் இந்தியா, ஆன்மிக நம்பிக்கைகளால் ஆனது. சங்கராச்சாரியார், இராமானுஜர் போன்ற ஆன்மிக பெரியோர்கள் நாடு முழுவதும் பயணம் செய்ததால் இந்தியா ஒன்றுபட்டுள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் ஆதின துறவிகளின் அறிவுறுத்தல்படி செங்கோல் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் 1947 ல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement