சரிகமப டைட்டில் வென்றார் கில்மிஷா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ப். இதன் 3வது சீசன் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பானது. இந்த சீசன் மொத்தம் 28 போட்டிட்யாளர்கர்ளுடன் தொடங்கப்பட்டட்து. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்கர்ளாக பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சிச்சியை அர்ச்சனா தொகுத்துத் வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் தேர்வானார்கள். இவர்களை தொடர்ந்து ப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டட் னர். மொத்தம் 6 போட்டியாளர்கர்ளுடன் இதன் இறுதி சுற்று போட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் டைட்டில் பட்டத்தை வென்றிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா. இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த ருத்ரேஷூம், மூன்றாவது இடத்தை சஞ்சனாவும், நான்காவது இடத்தை ரிக்ஷிதாவும் வென்றிருக்கின்றனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெற்றி பெற்ற இலங்கையை சேர்ந்த கில்மிஷா, “எம் மண்ணிற்கும், எம் மண்ணிற்காக உயிர்துறந்த மற்றவர்களுக்கும் என் வெற்றி சமர்ப்பணம்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.