இன்று யாரையாவது பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் ஒரே பதிலைத்தான் சொல்வார்கள். பணம். ஏனெனில் இங்கு எல்லாம் பிரச்னைகளுக்கும் காரணம் பணம். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வும் அதுவாகத்தான் இருக்கிறது. சரி, பணம் சும்மா வந்துவிடுமா? கண்டிப்பாக இல்லை. நாம் அதைச் சம்பாதிக்க வேண்டும்.
பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம், பிசினஸ் செய்து சம்பாதிக்கலாம். ஆனால், அதன் மூலம் மட்டுமே நமக்கான எல்லாத் தேவைகளும் பூர்த்தி ஆகிவிடுமா, அந்தளவுக்கு வருமானம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஒரே மாதிரியான வேலையைச் செய்பவர்களுக்குக் கூட ஒரே மாதிரியான ஊதியம் கிடைப்பதில்லை.
இதனால்தான் நாம் சம்பாதிக்கும் ஊதியம், வருமானத்தைத் தாண்டியும் கொஞ்சமாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான வழிகளையும் நாம் தேடுகிறோம் இல்லையா? பகுதி நேரம் வேலைபார்ப்பது, வேலைப் பார்த்துக்கொண்டே ஏதாவது பிசினஸ் செய்வது, யூட்யூப் சேனல் தொடங்குவது போன்ற வழிகளைப் பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால் இதுபோன்ற வழிகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவர்கள் என்ன செய்யலாம். கையிலிருக்கும் பணத்தை சேமித்து முதலீடு செய்வதுதான் ஒரே வழி.
சேமிப்பு, முதலீடு போன்றவற்றைச் செய்வதன் மூலம் நாம் தூங்கும்போதுகூட நமக்காக நம்முடைய பணம் வேலை செய்யும். அதுதான் பங்குச் சந்தை முதலீடு. நாம் பங்குகளில் முதலீடு செய்யும்போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்கிறோம். அந்தத் தொழில் வளரும்போது நம்முடைய முதலீடு வளரும்.
ஆனால், பங்குகளில் ரிஸ்க்கும் இருக்கிறது. அதனால்தான் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்து பங்குச் சந்தையின் பலனை பெற முடியும். மியூச்சுவல் ஃபண்டில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? என்ன ஃபண்டில் முதலீடு செய்யலாம்? எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம்? குறிப்பிட்ட ஆண்டுகளில் இவ்வளவு பணம் நமக்கு வேண்டுமெனில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? நம்முடைய பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் எப்படி நிறைவேற்றிக்கொள்ளலாம்?

இவையனைத்தையும் உங்களுக்கு கற்றுத் தர தயாராக இருக்கிறது நாணயம் விகடன். நாணயம் விகடன் நடத்தும் `உங்கள் பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்?’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு டிசம்பர் 30, 2023 சனிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது. இதில் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர், (Wealthladder.co.in) ச.ஶ்ரீதரன் சிறப்புரையாற்றுகிறார். இவர் நிதி ஆலோசனை மற்றும் காப்பீட்டு ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர் ஆவார்.
இந்தப் பயிற்சி வகுப்புக்கு கட்டணம் ரூ.300 மட்டுமே. கலந்துகொண்டு பயன்பெற முன்பதிவு செய்ய https://bit.ly/47ciwLW லிங்கை க்ளிக் செய்யவும்.