அமேசான் பிரைம் பயனர்களுக்கு நல்ல செய்தி… சந்தா அதிரடி குறைப்பு!

Amazon Prime Lite: அமேசான் நிறுவனம் அதன் லைட் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது அதன் அமேசான் பிரைம் லைட் சந்தா குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமேசான் பிரைம் லைட் இந்தியாவில் 999 ரூபாயில் வழங்கப்பட்டது. தற்போது இதில் 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அமேசான் பிரைம் லைட் இனி 799 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.  

அமேசான் இந்தியா நிறுவனம் அதன் பிரைம் லைட் உறுப்பினர் திட்டத்தின் விலையைக் குறைப்பதுடன், அமேசான் பிரைம் லைட் சந்தா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலன்களிலுமே சில மாற்றங்களைச் செய்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் இப்போது ஒரு நாள் டெலிவரி, இரண்டு நாள் டெலிவரி, திட்டமிடப்பட்ட டெலிவரி மற்றும் ஒரே நாள் டெலிவரி உள்ளிட்ட ஆப்ஷன்களை பெறுகின்றனர். இது நோ-காஸ்ட் மாதத்தவணை, ஆறு மாதங்களுக்கு இலவச திரை மாற்று, பிரத்யேக விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டமானது, தகுதியான முகவரிகளுக்கு அவசரமில்லாமல் ஷிப்பிங் செய்வதோடு 25 ரூபாய் கேஷ்பேக் மற்றும் தகுதியான முகவரிகளுக்கு ஒரு பொருளுக்கு 175 ரூபாய்க்கு காலை டெலிவரியும் வழங்குகிறது. இது தவிர, புதுப்பிக்கப்பட்ட அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் இப்போது இரண்டு சாதனங்களுக்கு மாறாக ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும்.

இருப்பினும், பிரைம் வீடியோ தரம் HD தரத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரைம் மெம்பர்ஷிப்பில் அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் பிரைம் ரீடிங்கிற்கான அணுகல் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவை Standard அமேசான் பிரைம் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சேவைகள்.

அமேசான் பிரைம் திட்டங்கள்

மொத்தத்தில், அமேசான் இந்தியாவில் நான்கு பிரைம் உறுப்பினர் சந்தா திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர பிரைம் சந்தா திட்டத்தின் விலை 299 ரூபாய், காலாண்டு பிரைம் மெம்பர்ஷிப் சந்தா திட்டம் மூன்று மாதங்களுக்கு 599 ரூபாய், வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப் திட்டம் 12 மாதங்களுக்கு 1,499 ரூபாய் உள்ளிட்டவை உள்ளது. இப்போது 799 ரூபாய் விலையில் கிடைக்கும் அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் திட்டம்.

கிடைக்கும் நன்மைகள்

அமேசான் பிரைம் உறுப்பினர் ஒரு நாள் டெலிவரி, இரண்டு நாள் டெலிவரி, திட்டமிடப்பட்ட டெலிவரி மற்றும் ஒரே நாள் டெலிவரி ஆப்ஷன்களை வழங்குகிறது. அதோடு, பிரைம் ரீடிங், அமேசான் மியூசிக்கிற்கான வரம்பற்ற அணுகல், அமேசான் பிரைம் வீடியோவிற்கான வரம்பற்ற அணுகல், பிரத்யேக ஒப்பந்தங்களுக்கான ஆரம்ப அணுகல், கட்டணமில்லா மாதத் தவணை, ஆறு மாத இலவச திரை மாற்று, பிரைம் கேமிங்கிற்கான அணுகல் போன்ற பலன்களை வழங்குகிறது. 

Amazon Family சலுகைகள், இந்தத் திட்டம் தகுதியான முகவரிகளுக்கு அவசரமில்லாமல் ஷிப்பிங் செய்வதோடு ரூ. 25 கேஷ்பேக் மற்றும் தகுதியான முகவரிகளுக்கு ஒரு பொருளுக்கு ரூ. 50 என காலை டெலிவரி வழங்குகிறது, இது லைட் உறுப்பினர் திட்டத்தை விட மிகக் குறைவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.