
பூகம்பம்: அரசியல் த்ரில்லர் படம்
ஐ இண்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல கராத்தே வீரர் இஷாக் உசைனி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'பூகம்பம்'. இதில் தில்சானா, ஹேமா, ரிஷ்ஷத் உள்பட பலர் நடித்துள்ளனர். தாமஸ் ரத்தினம் இசையையும், தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் இஷாக் உசைனி கூறும்போது, “பிச்சை எடுப்பதில் பல வகை உண்டு. இதில் தேர்தல் பிச்சையை பற்றி கூறி இருக்கிறேன். தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக போலந்து நாட்டில் அதிகமாக படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன். “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தாலும் விட மாட்டேன்”னு சொல்லி வில்லனுக்கும் , நாயகிக்கும் இடையில் நாயகனாக நான் ஆடும் அதிரடி ஆக்ஷனுடன் தேர்தல் கிரைம் திரில்லராக இந்த படத்தை இயக்கி உள்ளேன்” என்கிறார்.