சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான சலார், தமிழ் ரசிகர்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. அதேநேரம் டோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சலார், 10 நாட்கள் முடிவில் ஜெயிலர், லியோ வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
