IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி லெவனில் 2 மாற்றங்கள்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை, அதாவது ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் போட்டியில், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் ஆகியோர் இருந்தனர். பிரசித் கிருஷ்ணா முதல் டெஸ்ட் மூலம், இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மட்டில் அறிமுகமானார். ஆனால் அவரால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. இதனால், அவர் இரண்டாவது டெஸ்ட் ஆடும் பதினொன்றில் இருந்து நீக்கப்படலாம்.

முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்கா எந்த சுழற்பந்து வீச்சாளர்களையும் அணியில் சேர்க்கவில்லை. பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர் கூட பயன்படுத்தப்படவில்லை. இதனால், 2வது டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் பார்மேட்டை இந்திய அணியின் பின்பற்ற திட்டமிட்டிருக்கிறது. அதாவது பிளேயிங் லெவனில் இருந்து அஸ்வினை நீக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு பதிலாக அவேஷ் கானுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம். ஏனெனில் அவேஷ் இந்தியா ஏ அணியில் இருந்ததால், ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். 

அவரது அற்புதமான பந்துவீச்சு கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைந்திருக்கும் அவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆவேஷ் கானும், அஸ்வினுக்கு பதிலாக முகேஷ் குமாரும் சேர்க்கப்படுவார்கள். இது குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கலாம் என தெரிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, டிராவிட்டுடன் ஆலோசித்த பிறகு லெவனில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவின் உத்தேசமான பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின்/முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/அவேஷ் கான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.