தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டப் பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பொங்கல் வெளியீட்டை ஒட்டி இன்று சென்னையில் நடைபெறும் ‘கேப்டன் மில்லர்’ பட விழாவில் தனுஷ், அவரது இருமகன்கள் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை பிரியங்கா மோகன், ” ‘கேப்டன் மில்லர்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமானப் படம். எனக்குத் துப்பாக்கிலாம் பிடிக்கவே தெரியாது. அதுக்கு அவ்ளோ பயிற்சி கொடுத்தாங்க. இந்த படத்துல வர்ற கோவில் செட் பத்தி பேசியே ஆகணும். அது செட்னு நம்பவே முடியாத அளவுக்கு இருந்தது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ரொம்ப சீரியஸான நபர்னு நினைக்கிறாங்க. ஆனா ரொம்ப நகைச்சுவைத் தன்மையுடையவர். Finnaly, ‘Killer Killer, Captain Miller’ நான் உங்களோட பெரிய ரசிகை தனுஷ் சார். இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சில கேள்விகள் பிரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டது.
கேள்வி: ‘Poet or singer’: தனுஷ் சாரோட பாடல் வரிகள் பிடிக்குமா இல்ல பாட்றது பிடிக்குமா.
பதில்: தனுஷ் சார் பாட்றது பிடிக்கும். அவர் பாடின இளையராஜா சார் பாடுற மாதிரி இருக்கும்.
கேள்வி: புதுப்பேட்டை மாதிரியான அக்ஷன் படமா?or காதல் கொண்டேன் மாதிரியான படமா?
பதில்: ‘கேப்டன் மில்லர்’ ல ஆக்ஷன் படம் பண்ணியாச்சு. காதல் கொண்டேன் மாதிரியான படம்தான் இனி பண்ணனும்.

கேள்வி: தனுஷ் சார் எப்படி இருந்தா அழகு?
பதில்: தாடியோட லுக் தான்.
கேள்வி: ஒரே நேரத்துல தனுஷ் சார், செல்வராகவான் சார் டைரக்ஷன்ல வாய்ப்பு வந்தா எந்த படத்துல நடிப்பிங்க?
பதில்: செல்வராகவன் சார் படத்துல தனுஷ் சார் நடிப்பார். நான் அவர்கூட சேர்ந்து நடிப்பேன்.