INDvsSA: 7 பேர் டக்அவுட் – இந்திய அணி மோசமான சாதனை

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. கேப்டவுனில் முதல் இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி, கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன்கூட எடுக்காமல் இழந்தது. அதாவது 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கொண்டு ஒரு ரன்கூட எடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி ஒரு ரன் கூட எடுக்காமல் கடைசி 6 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதன்முறையாகும். இப்படியொரு மோசமான சாதனையை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்திருக்கிறது.

அத்துடன் இந்திய அணியில் மொத்தம் 7 பேர் டக் அவுட்டானார்கள். சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரை தவிர வேறு எந்தவொரு வீரரும் ஒரு ரன்கூட அடிக்கவில்லை. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்தனர். 153 ரன்களுக்கு 4 விக்கெட் என்று இருந்த இந்திய அணி முடிவில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் முதல் இன்னிங்ஸில் இழந்தது. முன்னதாக முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு சுருண்டது.  அந்த அணியில் அதிகபட்சமாக வெர்ரின்னே 15 ரன்கள் எடுத்தார்.

153 for 4.
 pic.twitter.com/SfdAR78ced

— Johns. (@CricCrazyJohns) January 3, 2024

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா, நிகிடி, பர்கர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 36 ரன்களுடன் களத்தில் உள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டீன் எல்கர் 12 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். அவருக்கு விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்தனர். 

நாளை இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே மொத்தமாக 23 விக்கெட்டுகள் விழந்தது. நாளை இந்த டெஸ்ட் போட்டி ஏறக்குறைய முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நான்கு இன்னிங்ஸ்களும் இரண்டு நாட்களிலேயே முடிய இருக்கிறது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.