புதுடெல்லி,
கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :