IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு?

India VS England: தென்னாப்பிரிக்காவில் நடந்த 2 டெஸ்ட் போட்டிளில் இந்தியா 1-1 என்று ட்ரா செய்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) அட்டவணையில் முதலிடத்தில் தற்போது உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2023-25 ​​WTC சுழற்சியின் முதல் சொந்தத் தொடரை இந்த மாதம் விளையாட உள்ளது. ஜனவரி 25-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா நடத்துகிறது.  தென்னாப்பிரிக்காவில் இளம் நட்சத்திரங்களான ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் மோசமான ஆட்டத்தின் காரணமாக இந்தியா சில கடினமான முடிவுகளை எடுக்கும் என்று எதிர்கொள்கிறது. இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு கேப்டன் ரோஹித் மற்றும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றவர்கள் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது சாத்தியமில்லை. இருப்பினும், பேட்டிங்கில் கூடுதல் பலத்தை ஏற்படுத்த ரிங்கு சிங் அல்லது சர்ஃபராஸ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம் பெற வாய்ப்புள்ளது.  தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட இஷான் கிஷன், விக்கெட் கீப்பராக அணிக்கு மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் மற்றும் அபிமன்யு ஈஸ்வரனுக்குப் பதிலாக முகமது ஷமி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற உள்ளனர்.  இந்திய பிட்ச் சூழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த வாரத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஐதராபாத்தில் தொடங்கும். அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் கடைசி டெஸ்ட் விளையாடப்படும்.  இங்கிலாந்து கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பிறகு, 2021ல் நடந்த சுற்றுப்பயணத்தில், சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றியுடன் தொடங்கினார்கள்; இருப்பினும், இங்கிலாந்து அடுத்த மூன்று போட்டிகளில் தோற்று தொடரை இழந்தனர். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் தலைமையில் இதுவரை டெஸ்ட் தொடரை இழக்காத இங்கிலாந்து அணி, இம்முறை என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான உத்ததேச இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், கேஎல் ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (WK), முகமது சிராஜ், முகமது ஷமி, முகேஷ் குமார்

போட்டி அட்டவணை:

ஜனவரி 25-ம் தேதி ஹைதராபாத்தில் முதல் டெஸ்ட்

பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2வது டெஸ்ட் 

பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டில் 3வது டெஸ்ட் 

பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியில் 4வது டெஸ்ட் 

மார்ச் 7-ம் தேதி தர்மசாலாவில் 5-வது டெஸ்ட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.