நடுத்தர வர்க்கத்தினரின் வருமான உயர்வு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நான்கு சக்கர வாகனங்கள் மீதான மக்களின் விருப்பம், அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர்கள் ஆகியவை மக்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வருமான வரிதாக்கல்…
2013–14 மற்றும் 2021–22 மதிப்பீட்டு ஆண்டுகளில், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்குகள் 295 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
15.3 சதவிகிதம் பேர் தலா 3.5 லட்சத்தில் இருந்து 5 லட்சத்துக்கும், 5 லட்சத்தில் இருந்து 10 லட்சத்துக்கும், 4.2 சதவிகிதம் பேர் 10 லட்சத்தில் இருந்து 20 லட்ச வருமானத்திற்கும் மேல்நோக்கி முன்னேறியுள்ளனர்.
36.3 சதவிகித வரி செலுத்துவோர் குறைந்த வருமானத்தில் இருந்து அதிக வருமான வரி வரம்புக்கு முன்னேறியுள்ளனர். இதன் இதன் விளைவாக 21.3 சதவிகித கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. 2023-ம் ஆண்டில் 8.2 கோடி வருமான வரி தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.
தனிநபர் வருமானம்…
2014 -ல் 100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. இவர்களின் கூட்டு வருமானம் 2014-ம் ஆண்டின் மொத்த வருமானத்தில் 1.64 சதவிகிதமாக இருந்தது.
2021 நிதியாண்டில் 100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்தாலும், அவர்களின் கூட்டு வருமானத்தின் பங்கு 0.77 சதவிகிதமாக குறைந்துள்ளது.
19.5 சதவிகித சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறியுள்ளன.

வாகன பயன்பாடு…
தொற்றுநோய்க்கு முன்பில் இருந்தே இரு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது. நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
2019 நிதியாண்டு முதல் இரு சக்கர வாகனங்களை விட நான்கு சக்கர வாகனங்களுக்கு மக்களிடையே விருப்பம் அதிகரித்துள்ளது. வாகன கடன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பெண்கள்…
கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில், வருமான வரி தாக்கல் செய்பவர்களில் 15 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்கின்றனர்.

நுகர்வோர்…
மக்கள் தொகையில் 47 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 3.65 அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் 303 ரூபாய்) குறைவான தொகையில் வாழ்கின்றனர். 73.1 கோடியில் 80 சதவீதம் பேர், அதாவது 58.5 கோடி பேர் முறை சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.
5 பேர் கொண்ட குடும்பத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு தனிநபரையும் எடுத்துக் கொண்டால், 11.7 கோடி தனிநபர்கள் இருக்கிறார்கள். இது வருமான வரி இ – ஃபைலிங் தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கைக்குச் சமம்.
ஆன்லைன் ஆர்டர்…
ஸொமேட்டோவில் உணவுகளை ஆர்டர் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. ஸொமேட்டோ ஆப்பில் உள்ள 0.44 கோடி பயனர்கள் பாதி நகர்ப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஸொமேட்டோவின் ஆண்டு அறிக்கையின்படி, ஒரு பயனருக்கு ஆர்டர் கொடுக்கப்படும் சராசரி தொகை 400 ரூபாய் என்று கூறப்படுகிறது.
`அனைத்து வருமான வகுப்புகளிலும் வளர்ச்சி காணப்படுகிறது, ஆனால் அதன் வளைவு என்பது மேல் மற்றும் கீழ் இரண்டிலிருந்தும் நடுத்தரத்தை நோக்கி நகர்கிறது’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.