சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அறுவடைத் திருநாளான பொங்கல், தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Best wishes on the auspicious occasion of Pongal. pic.twitter.com/BumW8AxmF9
— Narendra Modi (@narendramodi) January 15, 2024
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.