
ரஜினியின் வேட்டையன் படத்தின் போஸ்டர் வெளியானது
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் வேட்டையன். காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரஜினி துப்பாக்கியை ஏந்தியபடி ஆவேசமாக போஸ் கொடுக்கிறார். லைகாவின் எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.