சென்னை: பொங்கல் விடுமுறைதினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இன்று வண்டலூர் பூங்கா உள்பட அரசு சுற்றுலாத்தலங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுவாக செவ்வாய்கிழமை விடுமுறை தினமாகும். ஆனால், செவ்வாய்க்கிழமைகளில் பண்டிகை விடுமுறை வந்தால், பொதுமக்கள் வசதிக்காக அன்றைய தினம் சுற்றுலாத்தலங்கள் திறப்பது வழக்கமான நடவடிக்கை. இந்த நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் தினம் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இன்று அரசு பூங்காக்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் […]
