சென்னை: காணும் பொங்கலான நேற்று ( 17ந்தேதி) சென்னை கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் காணாமல் போன 27 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையின் மிக முக்கிய கடற்கரையான மெரீனாவில் சுமாா் காலை 11 மணியில் இருந்தே ஏராளமான மக்கள் வரத்தொடங்கினா். குழந்தைகள், உறவினா்களுடன் வந்த அவா்கள் கடற்கரையில் […]
