சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானானில் தொடர்ந்து நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி சில தினங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து அஜித் லண்டனில் புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகள் அனௌஸ்காவின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மீண்டும் அசர்பைஜான் திரும்பினார். ஆனாலும் திட்டமிட்டபடி இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறாமல் தற்போது தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
