Ather rizta teased – ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் விபரம் வெளியானது

450 சீரிஸ் ஸ்கூட்டர்களை தொடர்ந்து ஏதெர் எனர்ஜி அறிமுகம் செய்ய உள்ள புதிய ஃபேமிலி ஸ்கூட்டரின் பெயரை ரிஸ்டா (Ather Rizta) என அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் டெலிவரி அடுத்த 6 மாதங்களுக்குள் துவங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டீசல் என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாடல் முற்றிலும் குடும்பங்களுக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருப்பதுடன் சிறப்பான பூட்ஸ்பேஸ் உடன் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு கடும் சவாலினை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.

Ather Rizta Escooter

சில மாதங்களுக்கு முன்னதாக ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது பெயர் மற்றும் அறிமுக விபரம் டெலிவரி தொடர்பான தகவல்களை இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏதெர் 450 வரிசையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்போர்ட்டிவான தோற்ற பொலிவுடன் மிக நேர்த்தியாக ஏதெர் 450s ரூ.1.09 லட்சம் முதல் துவங்கி சமீபத்தில் வெளியான ஏதெர் 450 அபெக்ஸ் ரூ.1.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகின்றது. சமீபத்தில் வந்த விலை உயர்ந்த அபெக்ஸ் மாடல் மணிக்கு 100 கிமீ செல்லும் திறனை பெற்றுள்ளது.

புதிதாக வரவிருக்கின்ற ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருவிதமான பேட்டரி ஆப்ஷனை எதிர்பார்க்கப்படுவதுடன் டாப் ஸ்பீடு 80 கிமீ வரை பெறக்கூடும். 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150-160 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111-125 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் பேட்டரி தொடர்பான எந்த தகவலையும் ஏதெர் வெளியிடவில்லை.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி ஏதெர் சிஇஓ மேத்தா கூறுகையில், 2019 ஆம் ஆண்டு முதல் ஏதெர் குழு ரிஸ்டாவில் ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றது.  இந்த ஸ்கூட்டர், தொழில்துறையில் முதலாவதாக, பயனர்களுக்கு சிறப்பான சவாரி அனுபவத்தை வழங்குவதனை உறுதியளிக்கும் சில அற்புதமான அம்சங்களை கொண்டுள்ளது. புதிய குடும்பம் சார்ந்த பிரிவில் இருந்தாலும், ஏதெர் தரம் மற்றும் நம்பகத்தன்மையை பராமரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏதெர் Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டம் அனேகமாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து டெலிவரி ஜூன் அல்லது ஜூலை மாதம் துவங்கலாம்.

டிவிஎஸ் ஐக்யூப், ஓலா , பஜாஜ் சேட்டக் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள ஏதெர் ரிஸ்டா விலை ரூ.1.20 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.