திருப்பதி: ஆந்திர மாநிலம், பைரெட்டிபள்ளி ஊரில் உள்ள கால பைரவர்கோயில் அர்ச்சகர் முரளிதர் ஆச்சாரியார். இவருக்கு பைக் வாங்க ஆசை. அதற்காக கடந்த 3 ஆண்டுகளாக பக்தர்கள் தட்டில் காணிக்கையாக வழங்கிய சில்லறை காசுகளை முரளிதர் சேமித்து வைத்தார்.
அந்த தொகை ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்ததால், அவற்றை மூட்டை கட்டிக் கொண்டு, பலமனேரில் உள்ள ஒரு பைக் ஷோ ரூமிற்கு சென்றார். அங்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் விலை கொண்ட பைக்கை வாங்கினார். அதற்காக தன்னிடமிருந்த ரூ.1, ரூ.2,ரூ.5, சில்லறை காசுகளைகொடுத்தார். ஷோ ரூம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் சில்லறை காசுகளை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தனர். பின்னர் ஷோ ரூம் உரிமையாளர் ஒப்புக் கொண்டார். ஆசைப்பட்ட பைக்குடன் அர்ச்சகர் சென்றார்.