நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனில் ஏ.எஸ்.பி -யாக பல்வீர்சிங் ஐ.பி.எஸ் பணியாற்றி வந்தார். இவரிடம் விசாரணைக்காக வந்தவர்களை கடுமையாக தாக்கியதோடு, பற்களைப் பிடுங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார், மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் விஸ்ரூபம் எடுத்ததால், பல்வீர்சிங் ஐ.பி.எஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பல்வீர்சிங் உட்பட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வீர்சிங் ஐ.பி.எஸ்ஸின் சஸ்பெண்ட் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியானது. இந்தத் தகவல் பல்வீர்சிங் மற்றும் காவல்துறையினர்மீது புகாரளித்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். “விசாரணைக்காக வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பல்வீர்சிங் ஐ.பி.எஸ், சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதனால் அவருக்கு எந்தவித பணியும் காவல்துறையில் வழங்கப்படவில்லை. தற்போது அவர்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஆஜராகி வருகிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்வீர் சிங் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், அவரின் சஸ்பெண்ட் ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால், அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பல்வீர் சிங் உட்பட காவல்துறையினர் மீது எடுக்கப்படும். இதற்கிடையில் 2020-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான பல்வீர் சிங் உள்பட 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் ஏ.டி.எஸ்பி-க்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது எஸ்.பி பதவி உயர்வு அளிக்கப்படவுள்ளது. ஆனால் அந்தப் பதவி உயர்வு பட்டியலில் பல்வீர்சிங் உள்பட சிலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. சஸ்பெண்ட் ஆர்டர் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருப்பதால், பல்வீர்சிங்குக்கு காவல்துறையில் பணி ஒதுக்கீடு வழங்கப்படலாம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY