பல பாடங்களுக்கு புதிதாக 5500 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல், கணிதம், தொழிநுட்பம் மற்றும் விசேட மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணிபுரியும் 22,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதன் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படும்.
மேலும், அனைத்து மாகாண சபைகளும் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் தற்போது நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதால் குறித்த விடயம் தாமதமாகியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.