முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி காணும் அதுல்யா! மதுரவாயலில் முதியவர்களுக்கான அசிஸ்டெட் லிவிங் மையம்…

அப்பேற்பட்ட நம் வீட்டு பெரியவர்களை, பத்திரமாக பார்த்துக் கொள்வது நமது கடமை, அல்லவா? முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி கண்டு, இந்தியாவின் முன்னணி அசிஸ்டெட் லிவிங் மையமாக உருவெடுத்திருக்கும் அதுல்யா சீனியர் கேர், சென்னை- மதுரவாயலில் தங்களது 5-வது மையத்தை நிறுவியுள்ளது.1 லட்சம் சதுர அடி பரப்பளவில், 200 அதிநவீன அறைகளுடன் முதியவர்களுக்கான வசதிகளுடனும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்களுடனும், செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட திறமையான, பண்பான பராமரிப்பாளர்களைக் கொண்ட குழுவுடனும், சென்னை-மதுரவாயலில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு மையத்தை உருவாக்கியிருக்கிறது அதுல்யா சீனியர் கேர்.

மதுரவாயலில் அமைந்திருக்கும் அதுல்யா சீனியர் கேரின் புதிய பிரிவில், நம் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய இணையற்ற பராமரிப்பு, பாதுகாப்பு, ஆறுதல், மற்றும் சுகாதாரத்தை வழங்குவதற்காகப் புதிய சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

தனிப்பட்ட முறையில் மருத்துவப் பராமரிப்பு, சிறப்புப் புனர்வாழ்வுத் திட்டங்கள் மற்றும் மன ஆரோக்கியத்துக்கான பயிற்சிகள் என பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது அதுல்யா. அத்துடன், முதியோர்களுக்கான தரமான பராமரிப்பு மற்றும் கவனிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன் அமைப்புகள் மற்றும் டெலி ஹெல்த் சேவைகள் போன்ற புதுமையான தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பால், முதியோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வரும் நாட்டில், அதுல்யா சீனியர் கேர் முதியவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவே விளங்குகிறது.

முதியோர் பராமரிப்பு எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரியாக இந்த மையம் திகழ்கிறது, ‘வெறும் சேவையாக அல்ல, முதியவர்களின் வாழ்க்கையை வளமாக்கும் இடமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புகிறது’ அதுல்யா. சென்னை, பெங்களூரு, கோவை, ஹைதராபாத், கொச்சி என 9 இடங்களில் அதிநவீன பராமரிப்பு மையங்களை தொடங்கிய அதுல்யா, டிமென்ஷியா கேர், பாலியேட்டிவ் கேர், அசிஸ்டெட் லிவிங், பிசியோ மற்றும் ரிஹாப் போன்ற சேவைகளை முதியவர்களுக்கு வழங்கி வருகிறது. 

செவிலியர்கள் குறிப்பிட்ட நபரின் வீட்டிற்கே சென்று பராமரிப்பு வழங்கும் சேவைகளையும் அதுல்யா செய்து வருகிறது.
முதியவர்கள் பராமரிப்பு தேவைப்படுபவர்களுக்கு அன்பும் பண்பும் நிறைந்த சேவைகளை புரிவதில், அதுல்யா என்றும் பெருமை கொள்கிறது. முதியோர் பராமரிப்பு சேவைகளை பற்றி அறிவதற்கு 98849 45900 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.