புது தில்லியின் இலங்கை புதிய உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகரான இலங்கை கடற்படையின் கெப்டன் வைஐடி சில்வா ஆர்டபிள்யூபீ பீஎஸ்சீ அவர்கள் நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் இராணுவ தளபதி லெப்டினன் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை நேற்று (ஜனவரி 24) மரியாதை நிமித்தம் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

நியமனம் பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதி, நாட்டின் சிறந்த நலன்களுக்காக ஒரு பாதுகாப்பு ஆலோசகராக அவர் ஆற்றக்கூடிய முக்கிய இராஜதந்திர கடமையை எடுத்துரைத்து, நியமனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நல்லெண்ணம் மற்றும் பாராட்டின் அடையாளமாக, இராணுவத் தளபதியினால் புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.