
தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்களைக் இயக்கிய எம்.ராஜேஷ் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து 'பிரதர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து எம்.ராஜேஷ், நடிகர் அதர்வா உடன் இணைந்து புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. அதிதி ஷங்கர் இப்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.