புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு (25) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுய தொழிலில் ஈடுபடுவதற்கான வாழ்வாதார உதவிகளாக நிலத்தராசு, தோணி, வலை, மீன் பதனிடும் பெட்டி போன்றவை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸாம் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளான எம்.ஸலாம், எஸ்.லயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.