புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கௌவர சனத் நிஷாந்த அவர்களின் மறைவைத் தொடர்ந்து 2024 ஜனவரி 25ஆம் திகதி முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் இதனை அறியத்தருவதாக பிரதிச் செயலாளர் நாயகம் இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.