ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ!

Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.  தற்போது காயத்தில் அவதிப்பட்டு வரும் இவர் ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு மீண்டும் பிட்டாக இருக்க கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  அந்தவகையில் தற்போது ஹர்திக் பாண்டியா பந்துவீசத் தொடங்கி உள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் பாண்டியா பவுலிங் பயிற்சி மற்றும் வலைகளில் பந்து வீசும் வீடியோவை பகிர்ந்துள்ளது.  2023 ஒருநாள் உலகக் கோப்பையின் லீக் கட்டத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

அக்டோபர் 19 அன்று வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் வெளியேறியதாகவும், மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாக வந்துள்ளார் என்றும் கூறியது.  மும்பை அணி கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு கொடுத்துள்ளனர். ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் ரூ.17.50 கோடிக்கு கிரீன் மும்பை அணியில் எடுக்கப்பட்டார்.  

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, பாண்டியாவுக்கு பொறுப்பை வழங்கி உள்ளது மும்பை அணி.  ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இரண்டு ஆண்டுகள் விளையாடி உள்ளார். 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை தங்கள் முதல் சீசனில் வென்றது. மேலும், ஐபிஎல் 2023ன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குஜராத். ஆனால், இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வி அடைந்தது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், குஜராத் அணியை விட்டு மீண்டும் ஹர்திக் மும்பை அணியில் இணைந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஐபிஎல் 2024ல், மும்பை இந்தியன்ஸை பாண்டியா வழிநடத்துவது இதுவே முதல் முறை ஆகும். முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஆடும் போது, கேப்டன் பொறுப்பில் இருந்தது இல்லை.  குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக்கின் செயல்பாடுகள் அவரை இந்திய அணிக்கு கேப்டனாக மாற்றியது.  சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் ஹர்திக் பாண்டியா.  தற்போது ஐபிஎல்லில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக், 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியாவின் கீழ் ரோஹித் சர்மா விளையாட உள்ளார்.  2024 டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடலாம்.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ரோஹித் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் இடம் பெற்றார். இதன் மூலம் ஐசிசி டி20 உலக கோப்பைக்கு தான் தயராக இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.  2023 உலகக் கோப்பையில் இந்திய அணி பைனலில் தோல்வியை சந்தித்தது.  இதனால் ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து தேர்வுக்குழு நீக்க முடியாது. ஒருநாள் உலக கோப்பை போட்டியில் துணை கேப்டனாக பாண்டியா இருந்தால், அதே போல் டி20 உலக கோப்பையிலும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.