கடற்றொழிலாளர் நலனோம்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை உயர்வுகள் தொடர்பாக தமக்கு சலுகைகளைப்பெற்றுத்தர வேண்டும் என்று கடற்றொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதுதொடர்பில் ஜனாதிபதியுடனும், அமைச்சரவையிலும் கலந்துரையாடியுள்ளேன். ஜனாதிபதியும் இவ்விடயம் தொடர்பில் சாதகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளார். அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுபோல் கடற்றொழில் உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போது அதற்காக அறவிடப்படும் வரிகள் தொடர்பிலும் சாதகமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், கடலுணவு இறக்குமதிகளால் தாம் பாதிக்கப்படுவதாக பல தரப்பும் கோரிக்கை விடுக்கின்றனர். அதுவிடயத்தில் ஆராய்ந்து இறக்குமதிகளை தடை செய்வது அல்லது அதற்கான வரிகளை அதிகரித்து கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் கூறினார்.