அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை கைப்பற்றிய அவர்கள், இந்திரலோகத்தையும் கைப்பற்றி அங்கும் ஆட்சியமைத்தார்கள். தேவர்களின் தலைவன் இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்து சீர்காழி என்ற புண்ணிய தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி, மூங்கிலாக வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டு வந்தான். இந்திர லோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் வழிபட்டனர். இரவில் யார்கண்ணிலும் படாதபடி […]
