பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் 2019 முதல் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பலரும் தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது நலம். காய்கறியை விட இவற்றில் சத்து அதிகம். புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ‘பருப்பு வகைகள்; ஊட்டமளிக்கும் மண், மக்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement