Video: நம்பர் 7 ஏன் ரொம்ப ஸ்பெஷல்… தோனி கூலாக சொன்ன பதிலை பாருங்க!

MS Dhoni Viral Video: ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது, தல தோனி மீண்டும் டாஸ் போட வருவதையும், ஜடேஜா அவுட்டான பின்னர் களத்தில் பேட்டிங்கிற்கு வருவதையும், கீப்பிங்கில் நின்று பீல்ட் செட் செய்வதையும் பார்க்கப் போகிறோம் என்பதே பல கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணவோட்டமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பை அடித்திருந்தாலும், இந்த முறையும் கோப்பை எங்களுக்குதான் வீராப்பாக சுத்தும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை தல தோனிமீது. 

ஒருவேளை சிஎஸ்கே இந்த சீசனில் ஏமாற்றமே அளித்தாலும் தோனியின் ரசிகர்கள் அதனை இயல்பாக கடந்து செல்வார்கள். காரணம், தோனியின் யார், சிஎஸ்கே யார் என்பது அனைவருக்கும் தெரியும். 2020இல் மிக மோசமான சீசனில் இருந்து மீண்டு 2021இல் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே தட்டிச்சென்றது. அதேபோல் தான், 2022ஆம் ஆண்டு சீசனிலும் மோசமான தோல்வி, 2023இல் மீண்டும் சாம்பியன். 

ராஜ போதை 

தோனி ரசிகர்கள் இந்த பரமபத விளையாட்டுக்கு பழகிவிட்டார்கள் எனலாம். அவர்களுக்கு தோனியை பார்த்தால் போதும். அவர் ஒரு சிக்ஸர் அடித்தால் போதும். தோனி அவரது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி தருணத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், இன்னும் ஒரு சீசன் விளையாடமாட்டாரா என்ற ஏக்கம் மட்டுமே போகவே போகாது. அவரின் தீர்க்கமான கண்களில் தெறிக்கும் அதிரடி முடிவுகளை மீண்டும் மீண்டும் பார்க்க நினைப்பது ஒரு ராஜ போதை. 

இப்படி தோனியின் புகழ் பாட காரணம் அவரது விளையாட்டு மட்டுமில்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் நான் மேலே சொன்ன குழப்பமான கருத்து எதையும் சொல்லவே மாட்டார். மிக மிக எளிமையாக ஒரு சூழலை கையாள்வார். ஒரு விஷயத்தை அதிகமாக குழப்புவதை விட அதை அதன் போக்கில் விட்டு எளிமையாக எதை செய்ய முடியுமோ அதை செய்வார் எனலாம். 

‘Thala for a reason’ was originally started by Thala himself. ttps://t.co/IA9hrchPP1

— Abhishek ( Peter 2 ) (@nerdy__abhi__) February 10, 2024

தல போல வருமா…

அதேபோல்தான், சமீபத்தில் ஒரு நிறுவனத்தில் விளம்பர நிகழ்வில் தோனி பங்கேற்றிருந்தார். அப்போது, அரங்கத்தின் மேடையில் அமர்ந்திருந்த தோனியிடம், நெறியாளர் ஒருவர்,”உங்களுக்கு ஏன் 7ஆம் நம்பர் மிகவும் முக்கியமானதாக இருந்தது? நீங்கள் அந்த நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று உங்கள் பெற்றோர் கூறிய நேரமா…?” என்று நகைப்புக்குரிய தொனியில் கேள்வி கேட்டார்.

அதற்கு தோனி,”இல்லை. நான் பூமிக்கு வருவேன் என்று என் பெற்றோர் முடிவு செய்த நேரம் அல்லது நாள் அது. நான் ஜூலை 7ஆம் தேதி பிறந்தேன். ஜூலையும் வருடத்தின் ஏழாவது மாதம். 81ஆம் ஆண்டு பிறந்தனர். அதனால் 8இல் இருந்து ஒன்றை கழித்தால், 7 ஆகும். எனவே, எனக்கு என்ன நம்பர் வேண்டும் என கேட்கும் போது என்னால் எளிமையாக கூற வேண்டும்” என்றார். 

நான் கூறிய எளிமையாக கையாளுதலுக்கான சிறந்த உதாரணம் இது. தோனி களத்திலும் இப்படிதான் அடிப்படைகளை கறாராக பின்பற்றாவிட்டாலும் எதையும் போட்டுக்குழப்பாமல் எளிமையான முடிவுகளை எடுப்பார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஜோகிந்தர் சர்மாவுக்கு கடைசி ஓவரை கொடுத்தது போல, ‘He Has Other Ideas’ Simple Ideas.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.