டில்லி மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தைத் […]
