டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை இந்தியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. மேலும் பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மனோஜ் சோன்கர் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தம் 36 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜ.க.வுக்கு 16 வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. ஆயினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத […]
