டில்லி ராகுல் காந்தியின் யாத்திரை 26 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் பயணம் மேற்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கான்பூரில் பயணம் முடிந்ததும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஓய்வு எடுக்கிறார். பிறகு 24 ஆம் தேதி மொராதாபாத்தில் இருந்து தொடங்கி சம்பால், அலிகர், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா மாவட்டங்கள் வழியாக 25 ஆம் தேதி ராஜஸ்தான் செல்கிறார். வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் […]
